#BREAKING: தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமல் – மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு!
தமிழகத்தில் 9 மாவட்டங்களிலும் அக்டோபர் 16ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவித்த 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்துள்ளார். 9 மாவட்டங்களிலும் அக்டோபர் 16ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.
உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 22ம் தேதியுடன் நிறைவடைகிறது. மேலும் அக்டோபர் 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்ட்டுள்ளது.
மேலும், உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக ஐஏஎஸ் அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவர் என்றும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 4 விதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.