RSS ஊர்வலத்துக்கு அனுமதி வழங்காத இடங்களில் உளவுத்துறை அறிக்கைய ஆராய்ந்த பிறகு உத்தரவு.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவது தொடர்பாக 47 இடங்களுக்கு உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்து பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 47 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவது குறித்து வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
அக்டோபர் 2-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கவில்லை என கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-நம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
ஆனால், சட்ட – ஒழுங்கை கருத்தில் கொண்டு ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இதை எதிர்த்து உயரதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் வரும் நவம்பர் 6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தனர்.
இதுதொடர்பாக தமிழக காவல்துறை விரைவில் முடிவெடுத்து அனுமதி வழங்க வேண்டும் என்றும் இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து, அந்தந்த மாவட்டத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு அனுமதி அளிக்குமாறு மாவட்ட எஸ்.பி.க்களுக்கு தமிழக டி.ஜி.பி. அறிவுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில், அக். 2-ல் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு, ஊர்வலத்திற்கு அனுமதி வழங்காத நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விவகாரத்தில், காவல் துறை அனுமதி வழங்காத 47 இடங்களில் அனுமதி வழங்குவது தொடர்பாக வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதனிடையே, கடலூர், பெரம்பலூர் கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற எந்த இடத்திலும் வழங்கவில்லை என ஆர்.எஸ்.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்பின், 3 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டன. 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அனுமதி வழங்க தயார், மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது. நவ.6ல் பல இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…