தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு, காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய மனு மீது இன்று முடிவெடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்துவதற்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு செப்.28-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லுபுத்தூர் உளப்பட 9 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் செல்ல அனுமதி கோரி மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகம் முழுவதும் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அவர்களது உடை அணிந்து, ஊர்வலம் செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…