#Breaking:அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்க ரூ.7000 கோடி நிதி ஒதுக்கீடு – நிதியமைச்சர் அறிவிப்பு!

Default Image

நடப்பு ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை செயலக வளாகத்தில்  தாக்கல் செய்து வருகிறார்.

அதன்படி,பேசிய நிதியமைச்சர் கூறியதாவது:

பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.36,895.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக்காட்சி அமைக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்க பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் தொடங்கப்படும்.அந்த வகையில்,7000 கோடி மதிப்பில் கணினி ஆய்வகங்கள்,ஸ்மார்ட் வகுப்பறைகளுடன் அரசுப் பள்ளிகள் நவீனப்படுத்தப்படும்.அதே வேளையில்,அரசின் உதவி பெறாத தமிழ் வழியில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் பாட புத்தகங்கள் வழங்கப்படும்.

மேலும்,இல்லம் தேடிக் கல்வி திட்டம் நாட்டுக்கே முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படுகிறது,அதற்காக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கல்லூரி மாணவர்களின் திறனை மேம்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிதாக 15 மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள் அமைக்க ரூ. 125 கோடி மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் திறன் வளர்ச்சிக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’,என்று தெரிவித்துள்ளார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்