தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் 48,593 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு.
வடகிழக்கு பருவமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட 27 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.51 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 27 மாவட்டங்களில் 48,593 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 40,031 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. கடந்த அக்.1 முதல் டிசம்பர் 4 வரையான வடகிழக்கு பருவமழை காலத்தில் மழையால் பல மாவட்டங்களில் அதிகமான பயிர்கள் சேதமடைந்தன. சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோவில் பகுதிகளில் நவ.3 முதல் நவ.11 வரை மழையால் பயிர்கள் பெரிது பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில், விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதில், 32,533 ஹெக்டர் நிலங்களில் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறையில் 40,031 விவசாயிகளுக்கு ரூ.43 கோடியும், இதுபோன்று, 5,222 ஹெக்டர் நிலங்கள் பாதித்த 26 மாவட்டங்களில் 8,562 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ.6.96 கோடி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…