#Breaking:பத்திரப்பதிவு முன்பதிவுக்கு ரூ.5000 கட்டணம் – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு பத்திரப்பதிவு செய்வதற்கு அவசர முன்பதிவுக்கு ரூ.5000 கட்டணம் விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பத்திரப்பதிவு செய்ய விரும்புபவர்கள் குறுகிய கால அவகாசத்தில் ஆவணத்தை பதிவு செய்ய விரும்புவதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் பதிவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக,அதிக பத்திரப்பதிவு நடைபெறும் முதல் 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் இத்திட்டம் செயல்படுத்தபடவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,இது தொடர்பாக தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
“தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற 2022-2023 ஆம் ஆண்டிற்கான பதிவுத்துறை தொடர்பான மானியக் கோரிக்கையின் போது, மாண்புமிகு அமைச்சர் (வணிக வரிகள் மற்றும் பதிவு) சட்டமன்றத்தில் பின்வரும் அறிவிப்பை வெளியிட்டார்.
“பதிவு செய்ய விரும்பும் பொதுமக்கள் குறுகிய கால அவகாசத்தில் ஆவணப்பதிவு செய்ய விரும்புகின்றனர்.இவர்களின் வசதிக்காக முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதல் கட்டணம் பெற்று தட்கல் முறையில் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.முதற்கட்டமாக,அதிக எண்ணிக்கையிலான ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இத்திட்டம் செயல்படுத்தப்படும் ஒரு அவசர முன்பதிவு டோக்கனுக்கு ரூ.5000 கட்டணமாக விதிக்கப்படும்.”என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,பத்திரப்பதிவின் அவசர முன்பதிவுக்கு ரூ.5000 கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.