#Breaking:பிரேசில் செல்லும் 6-வீரர்,வீராங்கனைகளுக்கு தலா ரூ.30 ஆயிரம் – தமிழக அரசு அறிவிப்பு!

Default Image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்படி,6-வீரர், வீராங்கனைகளுக்கு பிரேசில் செல்ல விமானக் கட்டணமாக தலா ரூபாய் 30-ஆயிரம் வழங்கப்படுகிறது என தமிழக அரசு அறிவிப்பு.

24-வது கோடைகால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க பிரேசில் செல்லும் தமிழகத்தை சேர்ந்த 6-வீரர், வீராங்கனைகளுக்கு விமானக் கட்டணமாக தலா ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள்:

“பிரேசில் நாட்டில் வருகிற மே மாதம் 1-ந்தேதி முதல் 15- ந்தேதி வரை 24 வது கோடைகால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி (24th SUMMER DEAFLYMPICS – BRAZIL) நடைபெறுகிறது.இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனைகள்- சமீஹா பர்வீன் (19) (நீளம் தாண்டுதல் -LONG JUMP). ஆர்.சினேகா(25) (நீச்சல் -50m/100m – பின்னோக்கி நீந்துதல்-Swimming 50m/100m Backstroke). Oggijoblir அனிகா(18)(இறகுப்பந்து தனிநபர்- Badminton Singles),மற்றும் வீரர்கள் கே.மணிகண்டன்(19) (நீளம்தாண்டுதல் 100 மீட்டர் – Long Jump 100m). ஆர்.சுதன் (24) (மும்முனை தாண்டுதல் -Triple Jump), பிரித்வி சேகர்(29) (டென்னிஸ்-தனிநபர், Tennis-Singles) ஆகிய 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முதல்வருடன் நேரில் சந்திப்பு:

இதனை தொடர்ந்து வீரர். வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் 22.03.2022 அன்று தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது பிரேசில் செல்ல அரசின் சார்பில் விமானக்கட்டணம் மற்றும் உதவிகள் செய்திட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

விமானக்கட்டணமாக தலா ரூபாய் 30-ஆயிரம்;வாட்ஸ்அப் குரூப்:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அனைவருக்கும் விமானக்கட்டணமாக தலா ரூபாய் 30-ஆயிரம் வழங்கப்படுகிறது.

மேலும் வீரர்-வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்று தமிழ்நாடு திரும்பும்வரையில்,தகவல் தொடர்பு கொள்ளவும் வசதியாக வாட்ஸ்அப் குரூப் (whatsapp group) ஏற்படுத்தப்பட்டுள்ளது என மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர்நலன் .விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு மெய்யநாதன் அவர்கள் கூறியுள்ளார்”,என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்