தமிழக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்ல தமிழக அரசு முயற்சியை முன்னெடுத்துள்ளது என முதலமைச்சர் தகவல்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைப்பெறுகிறது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் 4 மண்டலங்களிலும் தலா ஒன்று என 4 ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என விதி எண் 110ன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்ல தமிழக அரசு முயற்சியை முன்னெடுத்துள்ளது என்றும் ரூ.25 கோடியில் ஒலிம்பிக் தங்கம் தேடுதல் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் உரையற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாட்டை ஊக்கப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சிலம்ப வீரர்களுக்கு விளையாட்டு துறைக்கான இட ஒதுக்கீட்டில் 3% வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் தலா ரூ.3 செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும். சென்னைக்கு அருகே பிரமாண்ட விளையாட்டு நகரம் அமைக்கப்படும். ஏடிபி சென்னை ஓபன் டென்னிஸ் தொடர், பீச் வாலிபால் போட்டிகளை மீண்டும் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது என்றும் கூறினார்.
மேலும், வடசென்னையில் ரூ.10 கோடி செலவில் நவீன குத்துசண்டை மையம் அமைக்கப்படும் என்றும் மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் எனவும் விதி ஏன் 110ன் கீழ் முதலமைச்சர் அறிவித்துள்ளார். விளையாட்டு துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ தமிழக அரசு முழு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…