#Breaking:ஹெக்டேருக்கு தலா ரூ.20,000 – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் முழுமையாக சேதமடைந்த குறுவை – கார்- சொர்ணவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு தலா ரூ.20,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மேலும்,மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகால்கள் ஆகியவற்றை சீரமைக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக,பயிர் மறுசாகுபடிக்கு இடுபொருட்கள் வாங்க ஏதுவாக ஹெக்டேருக்கு ரூ.6,038 வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்த அமைச்சர்கள் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தற்போது நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.