#BREAKING: உயிரிழந்த சிறுவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு!
கடலூரில் கட்டிடம் இடிந்து விழுந்து உயிரிழந்த இரண்டு சிறுவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவிப்பு.
கடலூர் மாவட்டம் வடக்கு ராமபுரம் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டடம் ஒன்று இடிந்து 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். கடந்த 2013-ஆம் ஆண்டு இலங்கை அகதிகளுக்காக கட்டப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியது. கட்டிடத்தின் அருகில் சிறுவர்கள் அமர்ந்திருந்த போது விபத்து உள்ளாகியுள்ளது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கடலூரில் கட்டிடம் இடிந்து விழுந்து உயிரிழந்த இரண்டு சிறுவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பில், கடலூர் மாவட்டம் ராமபுரம் கிராமத்திலுள்ள பழைய கட்டடம் இடிந்து விழுந்ததில் வீரசேகர் மற்றும் சதிஷ் ஆகிய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தைக் கேட்டு மிகுந்த துயரமடைந்தேன்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தாருக்கு எனது வருத்தைத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இவ்விபத்தில் காயமடைந்த சிறுவன் புவனேஷுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்திரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் புவனேஷின் குடும்பத்தாருக்கு ரூபாய் ஐம்பதாயிரமும் (ரூ.50,000) முதலமைச்சரின் பொது நிவாரணநிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் இராமாபுரம் கிராமத்திலுள்ள பழைய கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 இலட்சம் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/AYRi0haFbn
— CMOTamilNadu (@CMOTamilnadu) January 27, 2022