#BREAKING: நெல்லையில் ரூ.15 கோடியில் தொல்லியல் அருங்காட்சியகம் – முதல்வர் அறிவிப்பு!
கீழடியில் கிமு 4-ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த வெள்ளி காசு ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவிப்பு.
தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்து வருகிறார். அப்போது, நெல்லை நகரில் நவீன வசதிகளுடன் கூடிய ரூ.15 கோடி மதிப்பில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர், கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது. கீழடி அகழாய்வு பணிகளை மத்திய அரசு பாதியில் கைவிட்டது. இந்த அகழாய்வு மூலம் சங்ககால தமிழர்களின் வாழ்கை முறையை உலகமே அறிந்துள்ளது. கீழடியில் கிமு 4ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த வெள்ளி காசு ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொற்கை துறைமுகம் கிமு 6ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அகழாய்வு பணிக்கு ஏற்கனவே ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அகழாய்வு நடைபெறும் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.