#BREAKING: கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை திட்டம் – சான்றிதழ் பெற உத்தரவு!

Default Image

ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற உயர்கல்வித்துறை உத்தரவு.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டது. இதனடிப்படையில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள், கல்லூரி, பாலிடெக்னிக் அல்லது ஐடிஐயில் சேர்ந்து படிக்கும்போது அவர்களுக்கு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதனைத்தொடர்ந்து, கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அதிரடியாக நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

முதலாமாண்டை தவிர பிற ஆண்டுகளில் பயிலும் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கல்லூரி அடையாள அட்டை, 10,12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று மற்றும் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை பெற உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டதும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்