#BREAKING : மதுரை மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் -முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
மதுரை மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மதுரையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. இதனால் ஒரே நாளில் 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 988 ஆக அதிகரித்துள்ளது. அதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கொரோனா பாதிப்பு தீவிரமடைவதை அடுத்து, அங்கு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதில் மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக, மதுரையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்த மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மதுரை மாநகர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.