#BREAKING: தீக்குளித்து இறந்த நபருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு
சென்னையில் வீடுகளை இடிப்பதற்கு இடித்ததற்கு எதிராக தீக்குளித்த இறந்தவர குடும்பத்துக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்குவதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆக்கிரமிப்பு என கூறி வீடுகள் இடிபடுவதை எதிர்த்து கண்ணையன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில், இறந்தவரின் குடும்பத்துக்கு நிவாரண தொகையை முதல்வர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், சென்னை ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்த சம்பவம் கடைசி நிகழ்வாக இருக்க வேண்டும் என்பதே எனக்கு விருப்பம்.
ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து மறுகுடியமர்வு கொள்கை விரிவாக உருவாக்கப்படும் என்றும் கோவிந்தசாமி நகர் மக்களுக்கு மயிலாப்பூர் – மந்தைவெளி பகுதிகளில் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதனிடையே, சென்னை ஆர்.ஏ.புரத்தில் பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வசித்து வரும் நிலையில், அப்பகுதியில் உள்ள வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி இடிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.
ஆனால், இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தன்னுடைய வீடு இடிக்கப்படுவதை கண்டித்து அப்பகுதியில் வசித்து வந்த முதியவர் ஒருவர் நேற்று தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், ஆக்கிரமிப்பு விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதால் நாளை விசாரணை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.