தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.
தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின் நடைப்பெற்ற முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், ஆளுநர் உரையின் போது நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை தற்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டு வருகிறார்.அதிமுகவின் கடந்த 10 வருட ஆட்சிக்காலத்தில் அரசின் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகைகள்,கடன்களின் நிலை,மாநிலத்தின் வளர்ச்சி உட்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் கொண்ட 120 பக்கம் அடங்கிய விபரங்கள் வெள்ளை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
அதன்படி,அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்வு ஏற்பட்டுள்ளது என்று நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:
“அதிமுக ஆட்சியில் 2011 -16 இல் ரூ.17 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை.2016-21 இல் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்ந்தது.2020-21 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளது.
கடனை வாங்கி கட்டாயச் செலவு செய்யும் வகையில் மாநிலத்தில் நிதி நிலைமை சரிந்து விட்டது.தமிழகத்தில் கடைசி 5 ஆண்டுகளில் பொதுக்கடன் மட்டும் ரூ.3 லட்சம் கோடியாக உள்ளது.வருமானம் சரிந்துள்ளதை ரிசர்வ் வங்கி,நிதிக்குழு உள்ளிட்ட அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.5 ஆண்டுகளில் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு பொருளாதார சரிவு ஏற்படவில்லை”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் 'கேம் சேஞ்சர்' படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில்,…
சென்னை: நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய, 'திரு மாணிக்கம்' என்கிற ஒரு குடும்ப திரைப்படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி…
வாஸ்து சாஸ்திரம் என்றால் என்ன, இந்த ஆண்டில் வரும் தேதி ,நேரம் பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம்…
சென்னை: சென்னையில் நான்காவது முறையாக வேளாண் உழவர் நலத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள, செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை இன்று…
கர்நாடகா : தினம் தினம் வித்தியாசமாக சிலர் வழக்கு தொடர்ந்து நீதி மன்றத்தில் நிவாரணம் கோரி அவர்களுக்கு நிவாரணம் கொடுக்கப்பட்டு வரும்…
சென்னை: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசுத் துறையில் பணியாற்றும் சி மற்றும்…