உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் படிப்பை தொடர ஏற்பாடு செய்ய இயலாது.
உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடர முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு தளர்வு செய்து கொடுத்தால் அது இந்தியாவில் மருத்துவ படிப்பின் தரத்தினை பாதிக்கும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
இந்தியாவில் இருந்து உக்ரைனில் மருத்துவ படிப்பு பயின்று வந்த மாணவ, மாணவிகள் உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக தாயகம் திரும்பிவிட்டனர். உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள சுமார் 20,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பி இருந்தார்கள். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது, அவர்கள் தங்கள் கல்வியை இங்கவே தொடர வழிவகை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு பல தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
எனவே, இதுதொடர்பான வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இந்த தகவலை அளித்துள்ளது. மேலும், உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் படிப்பை தொடர வழிவகை செய்யும் முறை தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் இடமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…