கோடநாடு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கலான பிறகு மீண்டும் விசாரணைக்கு தடை வித்திக்க கோரும் வழக்கில் தீர்ப்பு வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோடநாடு கொலை ,கொள்ளை தொடர்பாக காவல்துறை விசாரணையை விரிவுப்படுத்தியுள்ளது.இந்த விசாரணையில் தனக்கு சில நபர்கள் பாதிப்பு ஏற்படுத்துவதாகவும்,காவல்துறைக்கு ஏற்றவாறு சாட்சி சொல்ல தன்னை கட்டாயப்படுத்துவதாகவும்,எனவே,இந்த விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றும்,இது தொடர்பாக நீலகிரி நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறி கோயம்புத்தூரை சேர்ந்த ரவி என்பவர் சென்னை உய்ரநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில்,இந்தவழக்கு இன்று நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது,மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வாதிடுகையில்,”கோடநாடு வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பிறகு காவல்துறை நீதிமன்றத்தில் அனுமதி பெற்று விரிவான விசாரணை நடத்த வேண்டும்,ஆனால்,இதை செய்யாமல் மனுவை மட்டும் தாக்கல் செய்து விட்டு விரிவான விசாரணையை காவல்துறை நடத்துகிறார்கள்.இது சட்டத்திற்கு முரணானது”,என்று தெரிவித்தார்.
மேலும்,இவர் சாட்சியம் என்ற அடிப்படையில்தான் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார் என்று காவல்துறை மற்றும் தமிழக அரசு தரப்பில் இருந்தும் வழக்கறிஞர் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி,”இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களின் பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்”,என்று கூறி இந்த வழக்கின் விசாரணையை வருகின்ற 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…