மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 9 மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும், இதற்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை.
இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இதனையடுத்து, தமிழக அரசின் தனி தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேரவையில் முன்மொழிந்துள்ளார்.
அந்த தீர்மானத்தில், 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இந்த மூன்று சட்டங்களும் நாட்டின் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை. மத்திய அரசின் சட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் சட்டம் கொண்டு வந்தது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப், சத்திஸ்கர், டெல்லி, மேற்குவங்கத்தை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத் பாலாஜி…
சென்னை: சென்னையில் 2025-ஐ வரவேற்க தயாரான மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் குவிந்துள்ளனர். மெரினா கடற்கரை மணிக்கூண்டு பூக்கள், வண்ண…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் தலைமை…
மணிப்பூர்: மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வன்முறை நடந்து வருகிறது. இதில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர்…
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி (STANDUP COMEDY) என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத்…
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று இரவு கடற்கரை சாலையில் நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள்…