BREAKING: பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரிய மனு தள்ளுபடி.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரிய வழக்கில் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்வதாலும் , கொரோனா கட்டுக்குள் வராததால் நேற்றுடன் முடிய இருந்த ஊரடங்கு மேலும் இரண்டு வாரத்திற்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இந்நிலையில், தனசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், இந்த ஊரடங்கு காலத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டது. இதில், மதுக்கடைகளும் மூடப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக மதுக்கடை முடியதாலும் , கள்ளச்சாராயம் இல்லை, என்பதாலும் மக்கள் குடிபழக்கத்தை மறந்து மதுபழக்கத்தை பலரும் கைவிடுகின்றனர்.
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த உத்தரவிடக் கோரி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனு தள்ளுபடி செய்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.! எதிர்பார்த்ததை விட வேகமெடுக்கும் நாசா!
February 12, 2025![Sunita Williams](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sunita-Williams.webp)
விட்டதை பிடித்த இலங்கை… ஆஸி.,யை வீழ்த்தி ஒரு நாள் தொடரில் முதல் வெற்றி.!
February 12, 2025![Sri Lanka vs Australia 1st ODI](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sri-Lanka-vs-Australia-1st-ODI.webp)