#BREAKING: தொழில்துறையில் புதிய அறிவிப்புகள் வெளியீடு – அமைச்சர் தங்கம் தென்னரசு
ஓரகடத்தில் மருத்துவ உபகரண தொழில்பூங்கா 150 ஏக்கரில் உருவாக்கப்படும் என்று தொழில்துறை கொள்கை குறிப்பில் தகவல்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று தொழித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், காஞ்சிபுரம் அருகே ஓரகடத்தில் மருத்துவ உபகரண தொழில்பூங்கா 150 ஏக்கரில் உருவாக்கப்படும் என்று தொழில்துறை கொள்கை குறிப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
இதுபோன்று, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் சிப்காட் தொழிற்பூங்காவில் 250 ஏக்கரில் தோல் பொருள் தொழில்பூங்கா ஏற்படுத்தப்படும் என்றும் நாட்டிலேயே முதன்முறையாக தூத்துக்குடியில் பன்னாட்டு அறைக்கலன் பூங்கா 100 ஏக்கரில் உருவாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.