#BREAKING: தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

Default Image

தமிழகத்தில் செப்டம்பர் 1ல் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.

தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புக்கு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

இதில் கொரோனா பரவலை தடுக்க 6 அடி இடைவெளியில் மாணவர்களை அமர வைக்க வேண்டும் என தமிழக மருத்துவத்துறை கூறியுள்ளது. மாணவர்கள் கை கழுவும் வசதி, உடல் வெப்பத்தை பரிசோதனை செய்யும் கருவி மற்றும் வைட்டமின் மாத்திரைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இதமான சூழல் இருந்தால் மாணவர்களை பள்ளி வளாகத்தில் அமர வைத்து படம் நடத்தலாம். பள்ளி வளாகத்தில் எச்சில் துப்புவதை தடுக்க வேண்டும். பள்ளிகளில் திறந்தால் முதல் நாள் 50% மாணவர்கள் வந்தால் மீதமுள்ள 50% மாணவர்கள் மறுநாள் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 100% தடுப்பூசி போட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து வகுப்பறையிலும் சானிடைசர், சோப் கலந்த நீர் இருக்க வேண்டும் என்றும் நோய் அறிகுறிகள் உள்ள மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

பள்ளிகள் சரியாக வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய சுகாதார பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு பொதுமுடக்கம் அறிவிப்பு வெளியிடும் போது தெரிவித்திருந்தது.

இதனையடுத்து, செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பது தொடர்பாக ஆகஸ்ட் 20-ம் தேதி முதல்வருடன் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Sexual harassment
telangana tunnel collapse
Earthquake - BayofBengal
Pakistan vs Bangladesh 2025
tn govt