சென்னை, திருவள்ளூர், காஞ்சிப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் பற்றிய விபரங்கள்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் கடந்த ஜூன் 14ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், தற்போது புதிய தளர்வுகளுடன், ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, வரும் 28-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மூன்று வகையாக மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மூன்றாவது வகையில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த 4 மாவட்டங்களில், ஏற்கனவே செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
- தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- உணவகங்கள் மற்றும் அடுமணைகளில் (hotels, restaurants and bakeries) பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும். மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் அனைத்து மின் வணிக நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
- இதர மின் வணிக சேவை நிறுவனங்கள் அனைத்தும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 இயங்கலாம்.
- இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- குழந்தைகள், சிறார்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், பெண்கள், விதவைகள் ஆகியோருக்கான இல்லங்கள் மற்றும் இவை தொடர்புடைய போக்குவரத்து இ-பதிவில்லாமல் அனுமதிக்கப்படும்.
- சிறார்களுக்கான கண்காணிப்பு / பராமரிப்பு, சீர்திருத்த இல்லங்களில் பணிபுரிவோர் இ-பதிவில்லாமல் அனுமதிக்கப்படுவர்.
• அனைத்து வகையான கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும்.
- அனைத்து அரசு அலுவலகங்கள், 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
• சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்க அனுமதிக்கப்படும்.
• அனைத்து தனியார் நிறுவனங்கள், 50% பணியாளர்களுடன் அனுமதிக்கப்படும்.
- ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். இதர தொழிற்சாலைகளும் 50 நிலையான சதவிகிதம் பணியாளர்களுடன் வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
- மின் பணியாளர் (Electricians), பிளம்பர்கள் (Plumbers), கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை இ-பதிவுடன் அனுமதிக்கப்படுவர்.
- மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- ஹார்டுவேர் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் அனுமதிக்கப்படும். மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- வாகன விநியோகஸ்தர்களது வாகன பழுதுபார்க்கும் மையங்கள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களது கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். • காலணிகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் அனுமதிக்கப்படும். மாலை 7.00 மணி வரை செயல்பட
- பாத்திரக் கடைகள், பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ/ வீடியோ கடைகள், சலவைக் அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள் கடைகள். தையல் கடைகள், காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- தேநீர்க் கடைகளில் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.
- மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும் 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை அனுமதிக்கப்படும்.
- கணினி வன்பொருட்கள், மென்பொருட்கள், மின்னனு சாதனங்களின் உதிரிபாகங்கள் (Computer Hardware, Software, Electronic Appliances Spare Parts) விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் அனுமதிக்கப்படும். மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Saloons, Spas) குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- . காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், அனுமதிக்கப்படும். • பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிருவாகப் பணிகள் அனுமதிக்கப்படும்.
- திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 நபர்கள் மட்டும் பணிபுரியும் வகையில் நடத்த அனுமதிக்கப்படும். படப்பிடிப்பில் பங்கேற்றும் பணியாளர்கள் | கலைஞர்கள் அவசியம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு படப்பிடில் கலந்து கொள்ள வேண்டும்.
- படப்பிடிப்புகளுக்கு பிந்தைய தயாரிப்பு பணிகள் அனுமதிக்கப்படும்.
- திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒருநாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
- மாவட்டத்திற்குள் பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
- நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மெட்ரோ இரயில் போக்குவரத்து, 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கிடையே பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
- வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவில்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும், வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.
- வீட்டு வசதி நிறுவனம் (HFCs) வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs), குறு நிதி நிறுவனங்கள் (MFIS) பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.