#BREAKING: முதலமைச்சரின் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை குறைப்பு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பிற்காக செல்லும் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை குறைப்பு.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பிற்காக செல்லும் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை குறைப்பு என சென்னையில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பொதுமக்களின் வாகனங்களை நிறுத்தாமல், முதல்வரின் வாகனம் மற்ற வாகனங்களுடன் சேர்ந்தே செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பு முதல்வர் பாதுகாப்பிற்காக சுமார் 12 முதல் 13 கான்வாய் வாகனங்கள் செல்லும். தற்போது அதன் எண்ணிக்கையை தமிழக அரசு பாதியாக குறைத்துள்ளது.