#BREAKING: கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட்! – தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுப்பு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஒருசில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் இதனால் அம்மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றுழத்த தாழ்வு பகுதி மத்திய அந்தமான் பகுதியில் நிலவுகிறது என்றும் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.