#Breaking : தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சில மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தற்பொழுது வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய 6 மாவட்டங்ளில் அதிகனமழை பெய்யும் என்பதால் இந்த 6 மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.