தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியீடு.
2021-2022ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பு தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 6,999 எம்.பி.பி.எஸ், 1,930 பி.டி.எஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
அரசு மருத்துவக்கல்லூரிகளில் 4,349, தனியார் கல்லூரிகளில் 2,650 என மொத்தம் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள 1,930 பி.டி.எஸ் இடங்களுக்கான தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டது. நாமக்கல்லை சேர்ந்த கீதாஞ்சலி 710 மதிப்பெண்களுடன் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இவரைத்தொடர்ந்து, பிரவீன் – 710, பிரசன் ஜித்தன் – 710 மதிப்பெண்களுடன் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர்.
www.tnmedicalselection.net, www.tnhealth.tn.gov.in என்ற இனையதளத்தில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 27-ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. ஜனவரி 27-ல் சிறப்புப்பிரிவு, 28, 29-ல் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஜனவரி 30 முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு முதன்முறையாக ஆன்லைனில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…