Breaking: ராம்குமார் கொலை வழக்கு!சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் – மாநில மனித உரிமை ஆணையம்
சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணம் குறித்து விசாரணை, சுதந்திரமாக நடத்த வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சுவாதி கொலை வழக்கில் கைதான நெல்லையைச்சேர்ந்த ராம்குமார் சிறையில் மர்மமான முறையில் இறந்தார். இதனையடுத்து ராம்குமாரின் தந்தை, தன் மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக்கூறி மனித உரிமை ஆணையத்தை நாடியிருந்தார்.
இந்த நிலையில் வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணையம், தமிழக அரசுக்கு ராம்குமார் வழக்கை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் நடத்த வேண்டும், சிறையிலுள்ள கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் காவலர்களை நியமிக்க உத்தரவு விடுத்துள்ளது.
மேலும் ராம்குமாரின் தந்தைக்கு இழப்பீட்டுத்தொகையாக ரூ. 10 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.