#BREAKING: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்.!

27 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், 1000க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். நெடுந்தீவுக்கும், கச்சத்தீவுக்கும் இடையே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ரோந்துக் கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் 3 படகுகளையும், அதில் இருந்த 22 மீனவர்களையும் சிறைபிடித்து, காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.
இதுபோன்று, கச்சத்தீவு அருகே பழுதாகி கிடந்த படகையும், அதில் இருந்த ஏழு மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்து, மன்னார் பகுதிக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக, கைது செய்த மீனவர்களை கரையில் இறக்காமல் படகிலேயே வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், 27 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025