கடந்த 2012 ஆம் ஆண்டு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டார்.இவரது சடலம் மார்ச் 29 ஆம் தேதி கல்லணை செல்லும் சாலையில் கண்டுபிடிக்கப்பட்டது.கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் அவரது உடல் போர்வையால் சுற்றப்பட்டு, கம்பிகளால் கட்டி காட்டில் வீசப்பட்டிருந்தது.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து,காவல்துறையினர் 12 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.ஆனால்,அதில் பெரிதும் பலனிக்காததால்,வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.பின்னர் தமிழக காவல்துறையே இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராமஜெயம் மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில்,தொடர்ச்சியாக ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புதிதாக துப்பு கிடைத்துள்ளது,எனவே விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் என்று உயர்நீதிமன்றத்தில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொலையாளிகளை பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்படவுள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய உயர்நீதிமன்றம் ஜூன் 10 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…