தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வரும் 25ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ள நிலையில் ஆணையத்தில் ஆஜராக விலக்கு கேட்டுள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகபோராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ( 2018 ஆம் ஆண்டு மே 22-ம் தேதி ) போலீசார் நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். ஆனாலும் ஆலை செயல்படுவதற்கு எதிராக மக்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டது.
ஆனால் அந்த சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி வந்தார். துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்தித்தார். காயமடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் ஆறுதல் கூறினார் ரஜினிகாந்த். இதன் பின் செய்தியாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் கூறுகையில், தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவியுள்ளனர் என்று கூறினார்.
இதற்குஇடையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.எனவே நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக சம்மன் அனுப்பியது.இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வரும் 25ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வரும் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினிகாந்த் மனுதாக்கல் செய்துள்ளார்.மேலும் அவரது மனுவில், நடிகர் என்பதால் தூத்துக்குடி ஆணைய அலுவலகத்தில் ஆஜராகும் போது ரசிகர்கள் அதிக அளவில் கூடிவிடுவார்கள். இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறியுள்ளார். கேள்விகளை எழுத்து மூலம் தந்தால் அதற்கு பதில் தர தயார் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…