பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரிய வடகம்பட்டியை சேர்ந்த மாரியப்பன் பெயர் ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இவருடன் சேர்ந்து மல்யுத்த வீரர் வினேஷ் போகட், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மாணிகா பத்ரா பெயரையும் தேர்வுக்குழு பரிந்துரைத்தது. இதுமட்டுமில்லாமல் விளையாட்டு துறையில் உயரிய விருதான ராஜிவ் கேல் ரத்னா விருதுக்கு ரோஹித் சர்மா பெயர் தேர்வு குழு பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில், பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா, மல்யுத்த வீரர் வினேஷ் போகத், ஹாக்கி வீராங்கனை ராணி, இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் சர்மா ஆகியோருக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா, இஷாந்த் சர்மா ஆகியோருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 29ம் தேதி காணொளி மூலம் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…