#BREAKING : ரஜினி உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை நிர்வாகம்..!
ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பின்போது படப்பிடிப்பில் இருந்த சிலருக்கு கொரோனா உறுதியான நிலையில், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், பரிசோதனை முடிவு நெகட்டிவ் வந்தது. இதனால், ரஜினி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், இன்று ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஜினி ரத்தத்தை சீராக வைத்திருக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளையும் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதால் ரஜினி இன்று மருத்துவமனையில் தங்கி இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினியுடன் அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.