ராஜேந்திர பாலாஜி, டெல்லியில் உள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து டெல்லிக்கு தனிப்படை சென்றுள்ளது.
முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து, ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட 4 பேர் மீது கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன்கோரி மனுதள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்த கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தலைமறைவானார். அவரை கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 8 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகிறது. தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பண மோசடி வழக்கில் தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை போலீசார் டெல்லி விரைந்தனர். ராஜேந்திர பாலாஜி, டெல்லியில் உள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து டெல்லிக்கு தனிப்படை சென்றுள்ளது. சமீபத்தில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சத்துணவு பணியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி 10 லட்சம் மோசடி செய்ததாக சாத்தூரை சார்ந்த பெண் ஒருவர் விருதுநகர் எஸ்.பி மனோகரிடம் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…