#Breaking:அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன்காரணமாக,மார்ச் 6 ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்திருந்தது.
தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களிலும் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடா,மன்னார் வளைகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலிலும் காற்றின் வேகம் மணிக்கு 45-55 கிமீ வேகத்தில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளர்கள்.
04.03.2022 – தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. pic.twitter.com/QN8n1UsZvo
— TN SDMA (@tnsdma) March 4, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025