#Breaking:மழை வெள்ள பாதிப்பு:களத்தில் இறங்கிய இபிஎஸ்!

Published by
Edison

சென்னை:கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேரில் ஆய்வு செய்து வருகிறார். 

வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில்,தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய தொடர் மழை பெய்தது. இதனால்,2015-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் 207 மிமீ மழை பதிவாகியுள்ளது.இருப்பினும்,நேற்று முதல் மீண்டும் சென்னையின் நகர், புறநகர் என அனைத்து இடங்களிலும் பாரபட்சமின்றி மழை பெய்து வருகிறது.

இதன்காரணமாக,சென்னையில் எங்கு திரும்பினாலும் வெள்ளகாடாக காட்சியளிக்கிறது.தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து,வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.மேலும்,சென்னையின் முக்கிய சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் முழ்கி கிடக்கின்றன.அதேபோல,வெளி மாவட்டங்கள், மாநிங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதனால்,மழை நீரை வெளியேற்றும் பணிகளில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மீட்பு படையினர் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில்,நேற்று முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடசென்னை உள்ளிட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். அந்த வகையில் இன்றும் 2-வது நாளாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரம் கால்வாயை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு,மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கல்யாணபுரம் மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் முதல்வர் வழங்கினார்.மேலும்,மீட்பு பணிகளை விரைந்து முடிக்குமாறும் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில்,சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேரில் ஆய்வு செய்து வருகிறார். மேலும்,மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு,மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.அதே நேரத்தில்,நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார்.

அவருடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினரும் பங்கேற்று மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Recent Posts

வார இறுதி நாள்.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

வார இறுதி நாள்.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

சென்னை : கடந்த சில நாள்களாக தங்கம் விலை உயர்ந்து, நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. ஆனால்,…

48 seconds ago

IND-W vs NZ-W : சர்ச்சையாக மாறிய ஹர்மன்ப்ரீத் செய்த ரன் அவுட் ..! கடுப்பான அஸ்வின்!

துபாய் :2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 4-வது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்,…

4 mins ago

களைகட்டும் விமானப்படை சாகச நிகழ்ச்சி: சென்னையில் எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம்?

சென்னை : 92வது இந்திய விமானப்படைத் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் நாளை விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.…

13 mins ago

இஸ்ரேல் நடத்திய தாக்குதல்..! 2000 பேர் உயிரிழந்ததாக லெபனான் அரசாங்கம் அறிவிப்பு!

லெபனான் : இஸ்ரேல், பாலஸ்தீன காசா நகர் மீது கடந்த ஒரு வருடமாக தாக்குதல் நடத்தி வருகிறது. சரியாக சொன்னால்…

33 mins ago

அதிரும் மெரினா..! அனல் பறக்க போகும் விமான சாகச நிகழ்ச்சி 2024!

சென்னை : 92வது இந்திய விமானப்படைத் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நாளை நடைபெற…

49 mins ago

விறுவிறு வாக்குப்பதிவு., ஹரியானா சட்டமன்ற தேர்தல் நிலவரம் இதோ.,

ஹரியானா : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டு ,  காஷ்மீரில் 3 கட்டங்களாக…

51 mins ago