#BREAKING: நீதியை நிலைநாட்டுகிறது சிபிசிஐடி – நீதிபதிகள் பாராட்டு.!

தந்தை, மகன் வழக்கு தொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீசார் நேற்று காலை தொடங்கியது. சிபிசிஐடி போலீசார் நேற்று முதல் ஜெயராஜ் வீடு, கடை மற்றும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை தொடர்ந்து இரவு போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னர் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ் பாலகிருஷ்ணன் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், சாத்தான்குளம் சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை சிபிசிஐடி உருவாக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை சிபிசிஐடியின் நடவடிக்கை தந்துள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டி உள்ளது.