நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குனர் கோவிந்திராவிடம், கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்பு கட்டிடத்தின் தரம் குறித்த இறுதி ஆய்வறிக்கையை ஐஐடி நிபுணர் குழு தாக்கல் செய்துள்ளது.
சென்னை, புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்பு கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சு உதிர்வது குறித்து,அங்கு சமீபத்தில் குடியேறிய பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். சுமார் ரூ.112 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடம், கடந்த 2016-ல் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் 864 வீடுகள் இருக்கின்றன.
குற்றசாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து, அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், கட்டிடத்தின் தரத்தை ஐஐடி சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இதனிடையே, கட்டுமான குறைபாடு குறித்த தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேறியது. கவனக்குறைவாக இருந்த குற்றசாட்டில் குடுசை மாற்று வாரிய பொறியாளர்கள் இருவர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கடந்த 29-ஆம் தேதி, நிபுணர் குழு முதல்வரிடம் வீடுகளின் தரம் குறித்த முழுமையான அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குனர் கோவிந்திராவிடம், கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்பு கட்டிடத்தின் தரம் குறித்த இறுதி ஆய்வறிக்கையை ஐஐடி நிபுணர் குழு தாக்கல் செய்துள்ளது.
ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…