#BREAKING: புதுக்கோட்டை – மீனவர்கள் வேலைநிறுத்தம்!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி வேலைநிறுத்தம் அறிவிப்பு.
14 மீனவர்கள் இலங்கை கடற்படை சிறைபிடிக்கப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பாட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 55 பேரை நேற்று முன்தினம், ஜெகதாப்பாட்டினம் மீனவர்கள் 14 பேரை நேற்றும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
ஏற்கனவே, ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று புதுக்கோட்டை மீனவர்கள் போராட்டதை அறிவித்துள்ளனர். ஜெகதாப்பாட்டினத்தில் 1,200 மீனவர்களின் போராட்டத்தால் 200 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 700 நாட்டுப்படகுகள், 3,000 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் முதல்… நாக்பூரில் 144 தடை உத்தரவு வரை.!
March 18, 2025
“பிற்படுத்தப்பட்டோருக்கு 42% இடஒதுக்கீடு”- தெலுங்கானா சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்.!
March 18, 2025
விண்ணிலிருந்து புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்.! பிரிந்து சென்றது க்ரூ டிராகன் விண்கலம்!
March 18, 2025