புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்யவுள்ளதாக அமைச்சர் கந்தசாமி தகவல்.
புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான் குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, இதுவரை காங்கிரேஸை சேர்ந்தவர்கள் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி, கிருஷ்ணராவ் மற்றும் ஜான்குமார் ஆகிய 4 பேர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 30 இடங்களில் காங்கிரஸ் – திமுக கூட்டணி பலம் 19ஆக இருந்த நிலையில், ஏற்கனவே, பாகூர் காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்ததால், காங்கிரஸ் கூட்டணி பலம் 18 ஆக குறைந்தது. தற்போது, மேலும் தொடர்ந்து 4 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால், காங்கிரஸ் கூட்டணி அரசின் பலம் 14-ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது,முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்யவுள்ளதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆளுநர் கிரண் பேடி, மத்திய அரசின் கெடுபிடியால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதாக திட்டம் என அமைச்சர் கந்தசாமி கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுவதால் அமைச்சரவையை நாங்களாகவே முன்வந்து ராஜினாமா செய்ய முதல்வர் நாராயணசாமி முடிவெடுத்திருப்பதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் 15 இடங்களில் காங்கிரஸும், மூன்று இடங்களில் திமுகவும் மொத்தம் 19 இடங்களில் பெருமான்மை வகித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…