#BREAKING: புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா – அமைச்சர் கந்தசாமி தகவல்

Default Image

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்யவுள்ளதாக அமைச்சர் கந்தசாமி தகவல்.

புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான் குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, இதுவரை காங்கிரேஸை சேர்ந்தவர்கள் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி, கிருஷ்ணராவ் மற்றும் ஜான்குமார் ஆகிய 4 பேர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 30 இடங்களில் காங்கிரஸ் – திமுக கூட்டணி பலம் 19ஆக இருந்த நிலையில், ஏற்கனவே, பாகூர் காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்ததால், காங்கிரஸ் கூட்டணி பலம் 18 ஆக குறைந்தது. தற்போது, மேலும் தொடர்ந்து 4 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால், காங்கிரஸ் கூட்டணி அரசின் பலம் 14-ஆக குறைந்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது,முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்யவுள்ளதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆளுநர் கிரண் பேடி, மத்திய அரசின் கெடுபிடியால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதாக திட்டம் என அமைச்சர் கந்தசாமி கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுவதால் அமைச்சரவையை நாங்களாகவே முன்வந்து ராஜினாமா செய்ய முதல்வர் நாராயணசாமி முடிவெடுத்திருப்பதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் 15 இடங்களில் காங்கிரஸும், மூன்று இடங்களில் திமுகவும் மொத்தம் 19 இடங்களில் பெருமான்மை வகித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்