BREAKING:பொதுத்தேர்வு 30 நிமிடம் தாமதமாக தொடங்கும்.!
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக குறைவான பேருந்துகள் இயங்குவதால் +1,+2 மாணவர்கள் குறித்த நேரத்தில் பொதுத்தேர்வுக்கு செல்வதற்கு சிரமமாக உள்ளதாக கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் +1,+2 பொதுத்தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதையெடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் +1, +2 பொதுத்தேர்வுகள் 30 நிமிடம் தாமதமாக தொடங்கும். இதனால் தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.45 மணி வரை நடைபெறும் என அறிவித்துள்ளது.
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.