#BREAKING : பொதுமக்கள் கவனத்திற்கு…! தீபாவளிக்கு 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி ..!

Default Image

தீபாவளியன்று காலை 7 முதல் 8 மணி மற்றும் மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.

தீபாவளி கொண்டாட மக்கள் தயாராகி வரும் நிலையில், தமிழகத்தில், பட்டாசு வெடிப்பதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி,  கடந்த ஆண்டை போல இந்தாண்டு காலை 7 முதல் 8 மணி மற்றும் மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

கவனிக்க வேண்டியவை 

  • பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
  • மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை

  • அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.
  • மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி
    காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க
    வேண்டும்.
  •  குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

diwali 1 diwali 2 diwali 3

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation
gold price
KL Rahul - Virat Kohli
TikTok Ban in USA
Coimbatore Tidel Park