#BREAKING : இலங்கை மக்களுக்கு உதவ நிதியுதவி வழங்குங்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Default Image

இலங்கை மக்களுக்கு உதவ நிதியுதவி வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.

இலங்கை மக்களுக்கு உதவ நிதியுதவி வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு. அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். இதற்கான ஒன்றிய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது.

இதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இந்த சூழ்நிலையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது. எனவே மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் வழங்கிடும் உதவிகள் இலங்கை மக்களுக்கு தேவையான பொருட்களாக வாங்கி அனுப்பி  வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.
நன்கொடை வழங்க விரும்புவோர் பின்வரும் ஏதேனும் ஒரு வழியில் வழங்கலாம்.
1. மின்னணு பரிவர்த்தனை : https://ereceipt.tn.gov.in.cmprf/cmprf.html
வங்கி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
தலைமைச் செயலக கிளை.
Gloor 600601-600 009
வங்கி கிளை
சேமிப்பு வங்கி கணக்கு எண்: 117201000000070, IFSC குறியீடு-IOBA0001172
பான் எண்- AAAGC0038F

SWIFT குறியீடு : IOBAINBB001 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மத்திய அலுவலகம், சென்னை. (வெளிநாட்டு பங்களிப்புகளுக்கு).
ECS மூலம் ஆன்லைனில் தொகையை அனுப்பும் பங்களிப்பாளர்கள், அவர்கள்
வருமான வரி விலக்கு பெறுவதற்கும் அதிகாரபூர்வ ரசீதை அனுப்புவதற்கும் பின்வரும் விவரங்களை தயவுசெய்து வழங்கவும்:

  • பங்களிப்பாளரின் பெயர்
  • பங்களிப்பு தொகை
  • வங்கி மற்றும் கிளை
  • பணம் அனுப்பும் தேதி
  • பரிவர்த்தனை குறிப்பு எண்:

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்