BREAKING: சென்னையில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை.!
15 நாட்களுக்கு சென்னையில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்,மனிதசங்கிலி , பேரணி, உண்ணா விரதங்கள் போன்ற அனைத்து வகையான போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 3-வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வருகின்ற 17-ம் தேதியுடன் முடிய இருந்த நிலையில் பிரதமர் மோடி 4-ம் கட்ட ஊரடங்கு முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் 9227 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வரும் 28 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு சென்னை காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து வகையான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மனிதசங்கிலி , பேரணி, உண்ணாவிரதங்கள் போன்றவை நடத்த தடை என சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் அதிகமாக கொரோனா பரவி வருவதால் ஊரடங்கு காலத்தில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மனிதசங்கிலி , பேரணி, உண்ணாவிரதங்கள் போன்றவைகளில் ஈடுபடும்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்க கூடும் என்ற எண்ணத்தில் இந்த உத்தரவை சென்னை காவல் ஆணையர் பிறப்பித்த்துள்ளார்.