தமிழகத்தில் மாநகராட்சிகள்,நகராட்சிகள்,பேரூராட்சிகளில் உள்ள சொத்து வரி 25% முதல் 150% வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15 ஆவது நிதி ஆணையமானது, தமது அறிக்கையில் 2022-2023 ஆம் ஆண்டு முதல், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் பொருட்டு, 2021 – 2022 ஆம் ஆண்டில், சொத்துவரி தள வீதங்களை (Floor rates) அறிவிக்கை செய்ய வேண்டும் எனவும், மற்றும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரி வீதத்தை உயர்த்திட வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதித்துள்ளது.
சொத்து வரி பொது சீராய்வு:
அதனடிப்படையில்,பெருநகர சென்னை மாநகராட்சியின் பிரதான பகுதியில் (Core city) 1998ஆம் ஆண்டிலும், பெருநகர சென்னை மாநகராட்சியுடன் புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர நகர்ப்புர உள்ளாட்சிகளில் 2008ஆம் ஆண்டிலும், சொத்து வரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்டது.
வழிகாட்டு குழு:
அந்த வகையில்,கடந்த ஜூலை 2013ஆம் ஆண்டு, சொத்து வரி பொது சீராய்வு மேற்கொள்வது தொடர்பாக, அரசாணை வெளியிடப்பட்டு, பின்னர் நவம்பர் 2019 ஆம் ஆண்டில் நிறுத்தி வைக்கப்பட்டு சொத்து வரி சீராய்வு மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்க குழுவும் அமைக்கப்பட்டது.
பல மடங்கு உயர்வு:
மேலும்,சொத்து வரியில் பல ஆண்டுகளாக எந்த உயர்வும் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த வருவாயில் சொந்த வருவாயின் பங்கு பெருமளவு குறைந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செலவீனம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
சொத்து வரி 25% முதல் 150% வரை உயர்வு:
இந்நிலையில்,மேற்கண்ட குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி 25% முதல் 150% வரை உயர்த்தப்பட்டுள்ளது.அதன்படி,
சென்னை:
4 வகைகளாக பிரித்து நிர்ணயம்:
இதற்கு முந்தைய சொத்து வரி சீராய்வுகளின் போது, குடியிருப்புகளின் பரப்பளவிற்கு ஏற்றவாறு தனித்தனியாக பிரித்து சொத்து வரி சீராய்வு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆனால் தற்போதைய சீராய்வு அடித்தட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் குடியிருப்புகளின் பரப்பளவை 4 வகைகளாக பிரித்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி,பெரும்பாலான மக்கள் 1200 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவுள்ள வீடுகளில் வசிப்பாதல் இந்த வரி உயர்வு பெருமளவு பாதிப்பினை ஏற்படுத்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…