சொத்துவரி உயர்வு குறித்த முதல்வரின் விளக்கத்தை ஏற்க மறுத்து அதிமுக, பாஜக வெளிநடப்பு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள்,நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை குறைந்தபட்சமாக 25 % முதல் அதிகபட்சமாக 150 % வரை உயர்த்தி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசு அறிவிப்பு விடுத்தது. அதிமுக கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், நேற்று பல இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சிகள் கோரியநிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் சொத்து வரி உயர்வு குறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து, சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாதது என்பதால், மக்கள் துணை நிற்க வேண்டும். ஏழை, நடுத்தர மக்களை பாதிக்காமல் சொத்து வரி மாற்றப்பட்டுள்ளது.
புதியபிரதிநிதிகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளதால், உள்ளாட்சி அமைப்புகளை சமாளிப்பதற்கு வரி உயர்வு தேவை என்றும், சொத்துவரி உயர்வை மனமுவந்து செய்யவில்லை என்றும் முதல்வர் விளக்கமளித்துள்ளார். முதல்வரின் விளக்கத்தை ஏற்க மறுத்து அதிமுக, பாஜக வெளிநடப்பு செய்துள்ளது.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட சொத்துவரி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் சொத்துவரியை உயர்த்த வேண்டுமென மத்திய அரசு குறிப்பிடவில்லை மக்களுக்கு திமுகவின் தேர்தல் பரிசே, சொத்துவரி உயர்வு என விமர்சித்துள்ளார்.
நாக்பூர் : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. நாக்பூரில் அவுரங்கசீப்…
சென்னை : கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…