அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த பிரச்சனை எழுந்துள்ள நிலையில், ஓபிஎஸ் – ஈபிஎஸ் தனித்தனியே ஆலோசனை.
அதிமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சை நீடிக்கும் சூழ்நிலையில், ஆதரவு நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் ஓபிஎஸ்-யுடன், அவரது இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். திட்டமிட்டபடி பொதுக்குழுவை கூடுவது குறித்து தம்பிதுரை, ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோருடன் ஈபிஎஸ் சென்னை பசுமை வழிசலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதனிடையே, அதிமுக பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்த 2,300க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் தந்துள்ளனர் என ஈபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொதுக்குழுவை தள்ளிவைக்க வலியுறுத்தி ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு எழுதிய கடிதத்தை அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் கையெழுத்திட்டு வாங்கியுள்ளார்கள் என்றும் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை முதல் ஒற்றை தலைமை குறித்த பிரச்சனை எழுந்துள்ள நிலையில், 8வது நாளாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…