விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 19ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அப்பொழுது சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை தயார் செய்து, அதனை கடல், குளம் போன்ற நீர் நிலைகளில் கரைப்பார்கள். அவ்வாறு கரைப்பதற்காக தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள் ரசாயன கலவைகளால் தயாரிக்கப்படுகிறது.
அதனால் நீர் நிலைகள் மாசடைகின்றன. எனவே ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகள் தயாரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளைகள் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையில் இந்த வழக்கில் ரசாயனக் கலப்படம் இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே செய்ய வேண்டும். ரசாயனம் கலப்படம் இருக்கக்கூடிய சிலைகளை ஆறு குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி விநாயகர் சிலைகளை தயாரிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை: விடாமுயற்சி பொங்கல் பண்டிகை ரிலீஸில் இருந்து தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஒரு…
டெல்லி : பாலஸ்தீன நாட்டின் எல்லையில் உள்ள காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்குமான தாக்குதல் என்பது…
டெல்லி : விண்வெளியில் 2 செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நிறைவேறியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் 2 செயற்கைகோள்களை…
சென்னை : விஜய் சேதுபதி இன்று (ஜனவரி 16) தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால், மீண்டும்…
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…