இபிஎஸ்-க்கு எதிரான தேர்தல் குற்றசாட்டுகள் குறித்து காவல்துறை விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் தடை.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தேர்தல் குற்றசாட்டுகள் தொடர்பான வழக்கில் விசாரணை நடத்த காவல்துறைக்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். இவ்வழக்கில் நீதிமன்ற உத்தரவு மீறி விசாரணை நடத்தியதாக காவல் அதிகாரிகள் மீது ஐபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து ஆணையிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி விசாரணை நடத்தியதால் காவல்துறை அதிகாரிகள் மீது எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். எடப்பாடி பழனிசாமி தொடுத்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளனர். இதனால், இபிஎஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
மேலும், இறுதி முடிவெடுக்கும் வரை விசாரணையை பெரிதுபடுத்த வேண்டாம் என சேலம் போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்யும்போது எடப்பாடி பழனிசாமி பிராமண பத்திரத்தில் சொத்து விபரங்களை மறைத்ததாக வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அமைச்சர் துரைமுருகன் எப்போது தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நக்கல் நயாண்டிகளுடன் பதில் கூறுவதை பார்த்திருக்கிறோம். அப்படி தான்,…
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று…
ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர்…
ஆந்திரப் பிரதேசம்: ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது என்பது வழக்கம். இந்த ஆண்டு (9ஆம்…