#Breaking:இரவில் விசாரணை நடத்தக்கூடாது – டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் வழக்குகளில் கைதாகும் நபர்களிடம் காவல் நிலையங்களில் வைத்து இரவு நேரத்தில் விசாரணை நடத்தக்கூடாது என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவில் அவர் கூறியதாவது:
“தமிழகத்தில் பகலில் கைது செய்யப்பட்டவர்களை மாலை 6 மணிக்குள் சிறையில் அடைக்க வேண்டும்.குறிப்பாக,காவல்நிலையங்களில் கைதிகளிடம் இரவில் விசாரணை நடத்தக் கூடாது”,என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சென்னை,திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் விசாரணைக் கைதிகள் இருவர் உயிரிழந்த விவகாரம் சர்ச்சை பெரும் ஆன நிலையில்,தற்போது டிஜிபி அவர்கள் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளார்..